கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

கடந்த 14-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘சிரிக்கி’ என்ற பாடலை நாளை ஜுலை 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.