#கெட்அவுட் தமிழக கவர்னர்: இன்று டிரென்டிங் ஆகி வரும் ஹாஷ்டேக்!

சென்னை: 

கெட் அவுட் தமிழக கவர்னர் (#GetoutTNGovernor)  என்ற ஹா‘ஸ்டேக்டுவிட்டர் வளைதளத்தில் டிரென்டிங் ஆகி வருகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் மோடி திரும்பி போ என்ற ஹாஸ்டேக் உலக அளவில் டிரென்டிங்கான நிலையில், தற்போது, தமிழக கவர்னரின் அத்துமீறிய செயல் காரணமாக கெட்அவட் தமிழ்நாடு கவர்னர் என்ற ஹாஸ்டேக்   செம டிரென்ட்டிங் ஆகி வருகிறது.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் மொபைல் ஆடியோ விவகாரம், தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்தது, மேலும் நேற்று பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டியது போன்ற செயல்களால் தமிழக கவர்னரின் செயல்குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டுவிட்டர் வலைதளத்தில்  #GetoutTNGovernor (தமிழக கவர்னரே வெளியே போ) என்கிற ஹாஸ்டேக்கை பிரயோகித்து கவர்னரை கிண்டலடித்து, அவருக்கு எதிராகவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஹாஸ்டேக் டிரென்டிங்காகி வருகிறது.