ஜாமீன் கிடைக்குமா? சசிகலா புஷ்பா மனு மீது இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை!

டெல்லி:

பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்து  தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில்  சசிகலாபுஷ்பா மனு செய்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் தன்னை தமிழக முதல்வர் அடித்தார் என்று பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார். தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

1delhi

சர்ச்சை புகழ் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள்  வந்த வண்ணம் உள்ளன.  பண மோசடி வழக்கு, அவர் வீட்டில் வேலைபார்த்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இரு இளம்பெண்கள் அவரது கணவர், மகன் மீது கொடுத்த பாலியல் புகார்கள்  போன்றவை அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மேலும் சசிகலா புஷ்பாவுடன் முன்னாள் அமைச்சரிர தொடர்பு, நிர்வாண மசாஜ், குடி கும்மாளம், பாலியல் தொல்லை, பல நண்பர்களுடன் தகாத உறவு போன்ற  ஏகப்பட்ட புகார்கள் சரமாரியாக வந்துகொண்டே இருக்கின்றன.

இதன் காரணமாக தன்னை கைது செய்து விடுவார்களோ என அஞ்சியுள்ள சசிகலா புஷ்பா தலைமறைவாக இருக்கிறார். அவர் சார்பாக அவரது வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் அபினவ் ராவ் ஐகோர்ட்டு நீதிபதியிடம் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க கோரி கோரிகை வைத்தார்.

அப்போது தனது கட்சிக்காரர் சசிகலா புஷ்பா மற்றும் கணவர், மகன் ஆகியோர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கான மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும்  மனு மீதான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு சசிகலா புஷ்பா தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.  இதனையடுத்து சசிகலா புஷ்பா மற்றும் அவருடைய கணவர், மகன் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.