மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் நியனம்: கமல் அறிவிப்பு

சென்னை:

டிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், கட்சியின் கொடியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஏற்றி வைத்து கமல் உரையாற்றினார்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தனை நியமித்து அறிவித்தார்.

கமலின் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியை கொடியை ஏற்றி வைத்து பேசிய நடிகர் கமல்ஹாசன் மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக, நமது மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட பின் நடைபெறும் இந்த கொடியேற்ற பெரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது  என்று கூறினார். அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார்.

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன், பொதுச்செய லாளராக அருணாச்சலம், பொருளாளராக சுரேஷ் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு இருப்ப தாகவும்,  செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர்,  மவுரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.