”பேய் பயம்” – கல்லறைத் தோட்டத்தில் படுத்து தூங்கிய எம்.எல்.ஏ.

பேய்கள் மற்றும் அமானுஷியங்கள் மீதான அச்சத்தை போக்கும் வகையில் ஆந்திராவில் உள்ள கல்லறை தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒரு நாள் இரவு முழுவதும் படுத்து தூங்கினார். ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த நிம்மலா ராமா நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை கல்லறை தோட்டத்தில் வெட்டவெளியில், கொசுக்கடிக்கு இடையில் படுத்து உறங்கினார். மேற்கு கோதாவரி மாவட்டம் அருகே பாலகோல் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு அமானுஷியங்கள் நடப்பதாக வதந்தி பரவியது. இதனால் அப்பகுதியில் வேலை செய்ய அச்சமடைந்த 50க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை நிறுத்தினர்.
nimmala naidu
இதனை கேள்விப்பட்ட நிம்மலாராமா நாயுடு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் புரளி பரவிய இடத்தில் படுத்து தூங்கினார். சனிக்கிழமை இரவு படுத்து தூங்க திட்டமிட்டதாக கூறும் நாயுடு, தொழிலாளர்களுக்கு பேய் மீது உள்ள அச்சத்தை போக்கவே இப்படி செய்ததாக கூறினார்.

நிம்மலா ராமா நாயுடுவின் செயலால் ஈர்க்கப்பட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில், “ ராமா நாயுடுவின் செயல் உள்ளூர் மக்களுக்கு மட்டுமில்லை, தேசிய அளவில் அவரது செயல் ஈர்க்கப்பட வேண்டும் ஏனெனில் அர்ப்பமாண சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு இது ஒரு போராட்டம் ஆகும்” என்று பதிவிட்டிருந்தார்.