“பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்படும் குலாம் நபி ஆசாத்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடும் தாக்கு..

 

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் அளித்த பேட்டியில் “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு, அந்த கட்சி தலைவர்களின் ஐந்து நட்சத்திர ஓட்டல் கலாச்சாரமே காரணம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு அரியானா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்நோய் நேற்று பதில் அளித்துள்ளார்,

“காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் குலாம் நபி ஆசாத் போன்ற சிலர் பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள். வேறு சிலர் தங்கள் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து மற்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரசுக்கு எதிராக சதி செய்கின்றனர்’’ என அவர் குற்றம் சாட்டினார்.

“இந்த சதி வேலையில் அவர்களால் வெற்றி பெற முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்,

“கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் கடைசியாக ஜெயித்தவர், குலாம் நபி ஆசாத். ஆனால், நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறோம். எங்களைத்தான் மக்கள் நம்புகின்றனர்” எனறு எம்.எல்.ஏ. குல்தீப் மேலும் கூறினார்.

– பா. பாரதி

You may have missed