புதுடெல்லி:

முஸ்லிம்களை பதற்றமடைய செய்வதற்காகவே, பிரம்மாண்ட கடவுள் மற்றும் தலைவர்கள் சிலைகளை பாஜக நிறுவி வருவதாக தி பிரிண்ட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.


தி பிரிண்ட் இணையம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் பிரம்மாண்ட சிலைகளை பொதுவெளியில் வைத்து இந்து தேசியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் விருப்பமாக இருக்கிறது.

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற கோஷம் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
வரலாற்றை நினைவு கூறும் வகையில் பல நாடுகளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் பெரும்பான்மையினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய சிலைகளை அமைப்பதன் மூலம் சிறுபான்மையினரை பதற்றமடையச் செய்கின்றனர்.

இந்து தேசியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் பிரம்மாண்ட சிலைகளை அமைப்பது பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் விருப்பமானதாகியிருக்கிறது.

இந்தியாவில் 17 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடு இந்தியா.
பன்முக கலாச்சாரத்தை கொண்டதாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட பிற சிறுபான்மையினர் 20% உள்ளனர்.

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 597 அடி உயர பிரம்மாண்ட சிலையை ஏற்கெனவே அமைத்துள்ளனர்.

தற்போது. உத்திரப் பிரதேசத்தில் ராமருக்கு 725 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்படவுள்ளது.
அதேபோல், மகாராஷ்ட்ராவில் 695 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணி, சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக நிலுவையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் சிவனுக்கு அமைக்கப்பட்ட 112 அடி மார்பளவு சிலை கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இது எல்லாமே மோடியின் விருப்பத்தின்பேரிலேயே நடக்கிறது.

சிலைகளை வைப்பதில் செலுத்தும் கவனத்தை பாஜக அரசு மக்கள் பிரச்சினையில் காட்டவில்லை என்பது உண்மையே.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன் வறுமையை ஒழிப்பேன், அனைவரையும் முன்னேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார் மோடி.

ஆனால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் கண்டுகொள்ளப்படவில்லை.
பணப் புழக்கம் ஏற்பட சில தைரியமான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

எனினும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தேசிய பொருளாதாரம் சீர்குலைந்தது.
எப்போது இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்து விழிப்புணர்வு என்ற போர்வையில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.