ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த  ‘வெள்ளி மங்கை’  சிந்துவிற்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.
patents
ஆந்திராவை சேர்ந்த  பி.வி.ரமணா, பி.விஜயா தம்பதியரின் மகளான புசர்லா வெங்கட சிந்து என்ற பிவி சிந்து 1995ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை வாலிபால் விளையாட்டு வீரர் என்பது அர்ஜுனா விருது பெற்றவர் என் பது குறிப்பிடத்தக்கது.
உலக பேட்மின்டன்  மகளில் விளையாட்டு வீரர்கள் முதல் 10 பேர்களில் ஒருவராக பிவி சிந்து இருக்கிறார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வது எனது கனவு என்று தீவிரமாக பயிற்சி பெற்று வந்த சிந்து, இறுதி போட்டியில் கடுமையாக போராடினார். இருந்தாலும் உலகின் நம்பர் 1 வீராங்கனையான மரின்-ன் ஆக்ரோசமான விளையாட்டை எதிர்கொள்ள முடியாமல் சிந்து தடுமாறி னாலும், இரண்டாவது பதக்கமான வெள்ளிப்பதக்கத்தை சிந்து பெற்றார் என்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சி. இதன் காரணமாக சிந்துவுக்கு ஏராளமான பரிசு பொருட்கள், கார்கள், வீடுகள் குவிந்து வண்ணம் உள்ளது.
badminton-women-s-singles
       ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் சாமுண்டேஸ்வர்நாத் சிந்துவுக்கு  முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ கார் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
       ஏற்கனவே நடைபெற்ற ( 2012ம் ஆண்டு)  ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல், தற்போது சிந்துவிற்கும் பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சாமுண்டேஸ்வர்நாத் கூறியதாவது,  சாய்னாவுக்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசாக என்னுடைய நண்பர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் அன்பளிப்பு வழங்கினார். இதேபோல சிந்துவிற்கும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
     டெல்லி அரசு வெண்கலப்பதக்கம் பெற்ற சாக்ஷி மாலிக்கிற்கு 1 கோடி பிரிசும், வெள்ளி பதக்கம் பெற்ற பிவி.சிந்துக்கு 2 கோடி பரிசும் வழங்குவதாக அறிவித்து உள்ளது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் சாக்ணி மாலிக்கின் தந்தைக்கு பதவி உயர்வு வழங்கவும்  முடிவு செய்துள்ளது.
       மேலும் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்து யாரெல்லாம் பதக்கம் வெல்கிறார்களோ அவர்களுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதுபோல சிந்துவிற்கு தரப்போகிறோம்.
       இதேபோல சிந்துவிற்கு 50 லட்சம் ரூபாயும்,  சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும்  இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.
       அனைத்திந்திய ஃபுட்பால் பெடரேசன் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுகளை சிந்துவிற்கும், சாக்ஷிக்கும் அறிவித்துள்ளது.
bothe
ரூ.1 கோடி பரிசு, நிலம்
     இது தவிர, தெலுங்கானா அரசு ரூ.1 கோடியும், நிலமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
   விஜயவாடாவைச் சேர்ந்த ஜூவல்லரி ஷோரூம்கள், சிந்துவை தங்களின் நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக நியமிக்கயிருப்பதாக தெரிவித்துள்ளன.
       மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிந்துவிற்கு வாழ்த்து கூறியதோடு ரூ. 50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளதாக அம்மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
       ஹைதராபாத், தெலுங்கானாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பலவும் ப்ளாட்களை பரிசாக அறிவித்துள்ளன.
       வெள்ளி வென்ற சிந்துவிற்கு ஹைதராபாத்தில் உள்ள பெட்டம்மா கோவில் மற்றும் ஜூபிலி ஹில்ஸ் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜையும் நடக்கயிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
spain
       தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சிந்துவிற்கு பரிசுகள் ரெடியாக இருக்கின்றன. விலை உயர்ந்த கார்கள், ப்ளாட்கள், பல கோடி ரொக்கப்பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா, விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டினம் வரையுள்ள கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் ஜூவல்லரி ஷோரூம்கள் போன்றவை  பரிசுகள் வழங்குவதற்கு சிந்துவின் வரவிற்காக காத்திருக்கின்றன.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.