சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்கன் குனியோ போன்ற நோய்களை அடுத்து,  கொசுக்கள் மூலம் பரவும் ‘ஜிகா’ என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது.
gika virus
அமெரிக்க நாடுகளை சமீப காலமாக மிரட்டி வந்த இந்த வைரஸ் தற்போது கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.  இந்த வைரஸ் தாக்கப்பட்டால்,  சாதாரண காய்ச்சல் போல ஆரம்பித்து விட்டுவிட்டு வரும், இறுதியில்தான் வைரஸ் பாதிப்பு பற்றி கண்டறிய முடிகிறது.
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்குகூட நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தாக்கப்பட்ட கர்ப்பிணிகள் பெற்ற குழந்தை சிறிய தலையுடனேயே பிறப்பதாக கூறப்படுகிறது.. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அறிவுத்திறன் வளராமலே வாழ வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதித்த குழந்தை
ஜிகா வைரஸ் பாதித்த குழந்தை

 
பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்குதல் காரணமாக சமீக காலமாக சிறிய தலையுடன் நிறைய குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
இதையடுத்து உலக சுகாதார அமைப்பு ( WHO- டபிள்யூஎச்ஓ) உலக நாடுகளுக்கு ஜிகா வைரஸ் பற்றி  எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கிடையில் சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் காரணமாக நோய்கள் பரவ தொடங்கி உள்ளதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறி உள்ளது.
சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 34 பேர் குணமடைந்து உள்ளனர். மீதமுள்ள 7 பேருக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அல்ஜூனைத் கிரெசன்ட் பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள்தான் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள்தான். மற்ற நான்கு பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 21 வயது முதல் 65 வயது வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வைரஸ் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.