தோனிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்த கில்கிறிஸ்ட்!

மெல்போர்ன்: உலகக்கோப்பை போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதியில், தோனியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடுத்து, அவருக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.

அவர் தனது டிவீட்டில் கூறியிருப்பதாவது, “நீங்கள் ஓய்வுபெறும் தருணம் குறித்து எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் அளித்த சிறப்பான பங்களிப்பிற்கு மிக்க நன்றி. உங்களின் அமைதித்தன்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை எப்போதுமே என்னைக் கவர்ந்த அம்சங்கள்!” என்றுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது, “இந்திய கிரிக்கெட் ரசிகர்களே, உங்கள் அணி உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனதை எண்ணி கோபமடைய வேண்டாம். உங்கள் அணி குறித்து கடுமையாகவும் நடந்துகொள்ள வேண்டாம்.
ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதல்ல.

அதன்பொருட்டு நிறைய விஷயங்களை சரியான முறையில் செய்ய வேண்டும். சிறிய தவறுகள்கூட பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்திய அணி முதன்மையான அணியாக திகழ்ந்து சிறந்த மற்றும் ரசிக்கத்தக்க கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது” என்றார்.