லண்டன்:

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை 1947ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்துள்ளதோடு, அந்தபகுதியை 5வது எல்லையாக சொந்தம் கொண்டாடி வருவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 23ம் தேதி பழமைவாத கட்சி தலைவர் பாப் பிரளாக்மேன் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இந்த திடீர் அறிவிப்பால் பிரச்னைக்குறிய பகுதிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.


மேலும், அந்த தீர்மானத்தில், கில்ஜித் பல்திஸ்தான் சட்டப்பூர்மாகவும், அரசியலமைப்புபடியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு ப குதியாகும். 1947ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு சொந்தமான இந்த பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்ரமித்துள்ளது. இங்கு மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர உரிமையையும் வெளிப்படுத்த முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் மூலம் இந்த பிராந்தியத்தில் மாற்றத்தை கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்வது விதிமீறலாகும். அங்கு சட்டவிரோதமாக சீனா&பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீன வெளியுறவு துறை அமைச்சகக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இரு நாடுகளின் மக்கள் நலன் கருதி இஸ்லாமாபாத்துடன் இணைந்து பொருளாதார மண்டலம் பணிகளை முன்னெடுத்து செல்ல தயாராக இருக்கிறோம். 51.5 பில்லியன் டாலர் மதிப்பில் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு சீனாவின் மேற்கு மாகாண சின்ஜியாங் காஸ்கர் மற்றும் பாகிஸ்தானில் பலோசிஸ்தான் மாகாணம் க்வாதார் துறைமுகமும் இணைக்கப்படுகிறது’’ என்றார்.