இந்தியாவில் முதலீடு செய்ய இருந்த சீன மொபைல் நிறுவனம் திவால் ஆனது

பீஜிங்

பிரபல மொபைல் நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலாகி உள்ளது

சீன நாட்டின் மிகவும் பிரபலமான ஜியோனி மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் தயாரித்து வந்தது.    விலை குறைவால் மொபைல் சந்தையில் கிடு கிடு என முன்னேறிய ஜியோனி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்நிறுவனத்தின் நிறுவன அதிபரான லியு லிராங் குக்கு சூதாட்ட மோகம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.   அண்மையில் ஸ்பெயின் சென்றிருந்த லியூ சூதாட்டத்தில் மட்டும் சுமார் 1000 கோடி யுவான் என்னும் சீனப்பணத்தை இழந்துள்ளார்.    நிறுவனம் பலருக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இருந்த சமயத்தில் இந்த செய்தி வந்ததால் பலரும் நிறுவனத்தை பணம் கேட்டு முற்றுகை இட தொடங்கினர்.

இந்நிறுவனத்தின் நிறுவன அதிஅர் லியு லிராங் கடந்த 2015 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.   இதை ஒட்டி அவர் தனது நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்க நீதிமன்றத்திடம் முறை இட்டார்.   அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜியோனி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் உற்பத்திக்காக ரூ. 650 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.