சென்னை:

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒட்டக சிவிங்கி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

20 வயதாகும் அந்த ஆண்  ஒட்டக சிவிங்கியின் பெயர் ரஹமான். அனுபவமற்ற பயிற்சியாளர்களால் கையாளப்பட்டு தாக்குதலுக்கு ஆளானதாகவும், அப்போது அது தவறுதலாக பள்ளத்தில் விழுந்து இறந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை அந்த ஒட்டகசிவிங்கி சுமார் 8 அடி ஆழமான பள்ளத்திற்குள் விழுந்ததாகவும், அதன் காரணமாக அதற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பள்ளத்தில் இருந்து கிரேன் மூலம்  மீட்கப்பட்ட ஒட்டகசிவிங்கிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இரவு 11.50 மணிக்கு ஒட்டகசிவிங்கி மரணம் அடைந்ததாக வண்டலூர் மிருக சாட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வண்டலூர் உயிரியில் பூங்கா அதிகாரிகள் கூறும்போது,  மிருக காட்சி சாலையை பார்க்க வரும் பார்வையாளர்கள், ஒட்டக சிவிங்கி மீது கற்களைக் கொண்டு தாக்கியதாகவும், அதன் காரணமாக காயமடைந் திருந்த ஒட்டகசிவிங்கிக்கு, சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டபோது,  அது மிரண்டு ஓடி நீர் நிரம்பிய பள்ளத்திற்குள் விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.

அதை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, கிரேன் மூலம் அதை வெளியே கொண்டு வந்தது சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால், சிறிது நேரத்தில் அது மரணமடைந்துவிட்டது என்றும் கூறி உள்ளனர்.

ஆனால், அனுபவமற்ற பயிற்சியாளர்களால் உயிரியில் பூங்காவில் உள்ள மிருகங்கள் கையாளப்பட்டு வருவதாலும், பார்வையாளர்களின் தாக்குதல் காரணமாகவும் மிருகங்கள் பாதிக்கப்படுவதாக  குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போது மரணமடைந்துள்ள ரஹ்மான் என்ற ஒட்டக சிவிங்கி கடந்த 1998ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள அலிப்பூர் மிருக காட்சி சாலையில் இருந்து, விலங்குகள் மாற்றம் முறையில்  கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.