கூட்டணி கட்சிக்கு தொகுதி பறிபோனதால் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அதிருப்தி

பாட்னா:

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியை கூட்டணி கட்சியான ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சிக்கு கொடுத்ததற்கு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


பீகாரில் பாஜக 17 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இந்நிலையில்,பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மத்திய அமைச்சர் போட்டியிட்ட தொகுதியையும் வலுக்கட்டாயமாக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கவில்லை.  நவாடா தொகுதி ராம்விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நவாடா தொகுதி மக்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தொகுதிக்கு நிறைய செய்துள்ளேன். நான் கட்சித் தொண்டனாகவே இருப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.