கௌரி லங்கேஷ் வரிசையில் கிரீஷ் கர்னாட்? : சிறப்புக் காவல் படை ஐயம்

ங்களூரு

கௌரி லங்கேஷ் போல கிரீஷ் கர்னாடும் கொலையாளிகளின் தாக்குதல் பட்டியலில் இருப்பதாக சிறப்புக் காவல் படை தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரீஷ் கர்னார்ட் அகில இந்திய அளவில் திரையிலும் நாடக மேடையிலும் புகழ்பெற்று விளங்குபவர் ஆவார்.   இவர் இந்துத்வா சக்திகளுக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருபவர்.   இதே போல பிரபல  பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கருத்துக்களை கூறி வந்தார்.   கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அவருடைய வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடிக்க காவல் துறை சிறப்புக் காவல் படையை அமைத்தது.   அவர்கள் காவல்துறை ஐஜி பீ கே சிங் தலைமையில் விசாரனை நடத்தினர்.   கொலையில் முக்கிய பங்கு வகிக்கும் 26 வயது இளைஞர் பரசுராம் வாக்மேர் என்பவரை  கைது செய்துள்ள்னர்.   ஏற்கனவே இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு டைரி கைபற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்த டைரியில் கௌரி லங்கேஷின் பெயருடன் வேறு சில பிரபலங்களின் பெயர் உள்ளன.  கௌரிக்கு அடுத்தபடியாக கிரீஷ் கர்னாட் பெயர் உள்ளது.   எனவே கௌரிக்கு அடுத்தபடியாக கிரீஷ் கர்னாட்டை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருக்கலாம் என சிறப்புக் காவல் படையினர் ஐயம் தெரிவித்துள்ளனர்.

அந்த டைரியில் உள்ள  ஞான பீட விருது பெற்ற லலிதா நாயக், உள்ளிட்ட யாவரும் இந்துத்வாவுக்கு எதிராக பேசி வருவதால் இவர்கள் அனைவரையும் கொல்ல திட்டமிடப் பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.