ஆதார் இல்லாததால் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு: டில்லி அரசு மருத்துவமனை அராஜகம்

டில்லி:

தார் கார்டு இல்லாததால், டில்லியில் உள்ள அரசு மருத்துவமனை  சிறுமிக்கு  சிகிச்சை அளிக்க மறுத்து விட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலையிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார். இதையடுத்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

உ.பி. நொய்டா  பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி உடல்நலமின்மை காரணமாக சிகிச்சை பெற டில்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் கேட்டுள்ளனர். ஆனால், அந்த சிறுமிக்கு ஆதார் இல்லாததால், அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த டில்லி மாநில பாஜ தலைவர் மனோஜ் திவாரி, இதை உடடினயாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கவனத்துக்கு கொண்டு சென்றார்.

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

அதையடுத்து, மத்திய அமைச்சர் தலையிட்டு அரசு மருத்துவமனை அதிகாரிகளை எச்சரித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  அந்த சிறுமிக்கு  டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

ஆதார் குறித்து உச்சநீதி மன்றம் விரிவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், டில்லி அரசு மருத்துவமனையில் ஆதார் இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.