பெண் கர்ப்பம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு நோட்டீஸ்?

ளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக  தமிழக அமைச்சர் ஜெயக்குமாருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் என்று கூறப்படுகிறது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இளம்பெண்  ஒருவரை கர்ப்பமாக்கிவிட்டதாகவும் அது குறித்து பேசிய உரையாடல் என்று ஒரு ஆடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்ததாகவும்  பிறப்புச் சான்றிதழில் டி.ஜெயக்குமார் என்று தந்தை பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இக்குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார், குறிப்பிட்ட ஆடியோவில் உள்ளது தனது குரல் இல்லை என்றார். தவிர பிறப்புச்சான்றிதழில் டி. ஜெயக்குமார் என்று குறிப்பிட்டிருக்கிறது. நாட்டில் எத்தனையோ டி.ஜெயக்குமார்கள் உண்டு என்று தெரிவித்தார். மேலும் சசிகலா  மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தை தான் தொடர்ந்து விமர்சிப்பதால் அவர்கள் தனது புகழை கெடுக்க சதி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்பாபு  என்பவர் அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தனது புகாரில், “உதவி கேட்டு வந்த அப்பாவி இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணின் வயிற்றில் கரு வளர, அதைக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண் மறுக்க, அவரை மிரட்டியிருக்கிறார் அமைச்சர். அவரது செல்வாக்கால் புகார் கொடுத்தும் அதைக் காவல் துறை பதிவு செய்ய மறுக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பிட்டிருக்கிறார்.

தேசிய மனித உரிமை ஆணையம் இந்தப் புகாரை பதிவு செய்து, நடவடிக்கைக்காக அனுப்பியிருக்கிறது.

ஆகவே விரைவில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு