தொடர் தொல்லையால் சிறுமி கர்ப்பம்.. கொடூரமான தந்தையும் தாத்தாவும் கைது..

ரத்தநாட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். அவருடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். மூத்த மகள் மட்டும் அவரது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்ற மகளுக்கே இளங்கோவன் அடிக்கடி பாலியல் தொல்லை தந்துள்ளார். இதையறிந்த, அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை, தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர். தற்போது அச்சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தான் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தந்தை இளங்கோவன் மட்டுமின்றி தாத்தா மாரிமுத்துவும் இவருக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இளங்கோவன் மற்றும் மாரிமுத்து இருவரையும், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

– லெட்சுமி பிரியா