விழுப்புரம்: ஆட்சியருக்கு “லஞ்ச பணத்தை” அனுப்பிய பெண்

விழுப்புரம்:   மாவட்ட ஆட்சியருக்கு பெண்மணி ஒருவர் லஞ்ச பணத்தை அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம்திருநாவலூரைச் சேர்ந்த சுதா. இவரது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். தந்தையின் ஈமச்சடங்கு தொகை வழங்க சுதா மனு செய்தார். இந்தத் தொகையை ஒதுக்க வேண்டும் என்றால் 3000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று  ஊராட்சி செயலாளர் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில்,  ஊராட்சி செயலாளர் மீது புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு மனஉ அனுப்பிய சுதா, அத்துடன் ரூ.3,000 “லஞ்ச பணத்தை”யும் மணி ஆர்டர் செய்துள்ளார்.

இது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது