போபால்:

ம.பி.,யில், தன் ஆசிரியர்களை, தேச விரோதி என, ‘பேஸ்புக்’கில் குறிப்பிட்ட மாணவி, கல்லுாரியில் இருந்து, ஒரு ஆண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ம.பி. தலைநகர் போபாலில், மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா என்ற கல்லுாரி செயல்படுகிறது.  இங்கு, அஸ்மா கான் என்ற மாணவி, அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், பகத் கிராந்தி தளம் என்ற மாணவர் அமைப்பில் உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதற்காக, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த, அஸ்மா கான் அனுமதி கோரினார். ஆனால்  கல்லுாரி நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இதையடுத்து, அனுமதி மறுத்த ஆசிரியர்களை, தேசவிரோதி என, தன் பேஸ்புக் பக்கத்தில், அஸ்மா கான் விமர்சித்து இருந்தார். இது, சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மாணவியின் செயலைக் கண்டித்து, அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து, ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது.