உ.பி. அதிர்ச்சி:  பள்ளி மாணவியை மூன்று மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ

மீரட்:

ள்ளி மாணவியை மூவர் கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மீரட் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அவர்.

இந்தப் பெண்ணை மூன்று இளைஞர்கள் சேர்ந்து கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.   அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

பிறகு  அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக அச்சுறுத்தி தொடர்ந்து மூன்று மாதங்கள் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் இதை யாரிடமாவது சொன்னால், முகத்தில் திராவகம் வீசுவதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

அந்த மாணவி, மூன்று மாதங்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதால், பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு புகார் செய்தது. இதையடுத்து மாணவியை பெற்றோர் விசாரிக்க, உண்மை தெரிந்தது.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த மூன்று இளைஞர்கள் மீதும் கூட்டு பலாத்காரம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தும் கொடுமைகள்,   குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்று இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.