குஜராத் : பப்ஜி விளையாட்டு தோழரை மணம் செய்ய விவாகரத்து கோரும் தாய்

கமதாபாத்

ன்னுடன் பப்ஜி விளையாடுபவரை திருமணம் செய்வதற்காக ஒரு வயதுக் குழந்தையின் தாய் கணவரை விவாகரத்து செய்ய மனு அளித்துள்ளார்.

பப்ஜி என அழைக்கப்படும் விளையாட்டு மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.   சமீபத்தில் ஒரு மாணவர் பப்ஜி விளையாட்டால் பாடங்களை சரிவர படிக்காமல் தேர்வில் பப்ஜி விளையாடுவது பற்றி எழுதி இருந்தார்.  அத்துடன் பல பெற்றோர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பப்ஜி மோகம் குறித்து புகார்கள் அளித்துள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 18 ஆம் வயதில் ஒரு கட்டிட ஒப்பந்ததாரரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.  உடனடியாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து தற்போது அந்த குழந்தைக்கு ஒரு வயதாக உள்ளது.  இந்த பெண்ணுக்கு பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது.   அவர் வழக்கமாக ஒரு இளைஞருடன் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் குஜராத் மாநில பெண்கள் உதவி மையமான அபயம் மையத்துக்கு அந்த பெண் தொலைபேசி மூலம் பேசி உள்ளார்.   அவர் தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் தன்னுடன் பப்ஜி விளையாடும் இளைஞரை மணம் முடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.    மேலும் இதற்கு தமது தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தனனை அந்த இளைஞருடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அபயம் அமைப்பின் உதவியாளர் சோனல் சகாத்தியா அந்தப் பெண்ணை சந்தித்துள்ளார்.  அப்போது அந்தப் பெண் தன்னுடன் பப்ஜி விளையாடும் இளைஞரை திருமணம் செய்துக் கொள்வதற்காக கணவரிடம் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி தந்தை வீட்டுக்கு வந்ததாகவும் தந்தை தனது விவாகரத்தை எதிர்ப்பதால் அபயம் அமைப்பு மூலம் விவாகரத்து பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அபயம் அமைப்பின் ஆலோசகர் குழு அந்தப் பெண்ணிடம அவருடைய மற்றும் அந்தப் பெண்ணின் குழந்தையின் எதிர்காலம் பாழாகும் என அறிவுரை வழங்கி உள்ளனர்.  அத்துடன் அவர்கள் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோருடன் பேசி அவரை கணவருடன் சேர்த்து வைத்துள்ள்னர்.

கார்ட்டூன் கேலரி