ராணாவின் காதலை ஏற்று கொண்ட காதலி…..!

--

2010 ஆம் ஆண்டு ’லீடர்’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராணா டகுபதி பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்.

நீண்ட நாட்களாகவே ராணாவின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தபடி இருந்தது . தற்போது தனது காதலி யார் என்பது பற்றி ராணாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

View this post on Instagram

And she said Yes 🙂 ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி.சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். பகுதி நேர மாடலாகவும் சில விளம்பரங்களில், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார்.

ராணாவின் இந்தப் பதிவுக்கு ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.