பனாஜி,

மீப காலமாக பெண்களும் பீர் அருந்த ஆரம்பித்துள்ளதை கண்டு தான் பயப்படுவதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்க வேலை என்றால், பணியே  கிடையாது என்ற எண்ணத்திலேயே மக்கள் அரசாங்க வேலைகளை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கோவாவில் ‘மாநில இளைஞர் பாராளுமன்றம்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவா முதல்வர்  மனோகர் பாரிக்கர் கூறியதாவது,

இந்தியாவின் சுற்றுலாதலமான கோவாவில் போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாக கூறிய பாரிக்கர், போதை மருந்துகளை விற்பனை செய்துவரும் கும்பல்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்த தாக்குதல் கோவாவில்  முற்றிலுமாக போதைப்பொருட்கள் கட்டுப்படுத்தும் வரை தொடரும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், இதை  பூஜ்ஜியத்தை எட்டும் அளவுக்கு கொண்டு வரப்பட முடியுமா என்பதில் தனக்கு நம்பிக்கை யில்லை என்ற அவர்,  கல்லூரிகளில் போதை மருந்துகள் பெருமளவில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது, ஆனால் அதை தான் நம்பவில்லை என்ற அவர்,  தற்போது நாட்டில் பெண்களும் பீர்கள் குடிக்க தொடங்கி உள்ளார்கள், இதன் காரணமாக அவர்கள் தங்கள் எல்லையை மீறி வருகிறார்கள் என்றும் கூறினார்.

மாநிலத்தில் போதை பொருள் ஒழிக்க கடுமையான நடவடிக்கைஎடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்,  அதன் காரணமாக 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும், தற்போதைய சட்டத்தின் காரணமாக பிடிபடும் குற்றவாளிகள் 15 நாட்களில் பெயிலில் வந்து விடுகிறார்கள், ஆனால் அவர்கள்மீது கருணை காட்டக்கூடாது என்றும் கூறினார்.

கோவா இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசிய அவர்,  கோவா இளைஞர்கள் கடுமையாக உழைக்கி றார்கள்  என்றும், ஆனால்,  தற்போதைய இளைஞர்கள் அரசாங்க வேலைகளையே அதிகம் விரும்புவதாகவும், ஒரு  துறையிலுள்ள எழுத்தர் பணிக்கு ஒரு நீண்ட வரிசை காணப்படுகிறது என்றார்.

இதற்கு காரணம் “அவர்கள் கடினமாக உழைக்க விரும்பவில்லை” என்றார். ஏனென்னறால், அரசாங்க வேலை என்றால், அவர்கள் எந்த வேலையும் பார்க்க வேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றும் கூறினார்.