பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: ம.பி. முதல்வர் அறிவிப்பு

போபால்:

‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கடும் என்றும், ஆணாதிக்க மன நிலைக்கு எதிராக பெண்கள் பிரச்சாரம் மேற்கொள்ள சுய உறுதி ஏற்க வேண்டும்’’ என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை கொண்டு வ ந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெண்கள் அமைப்பு சார்பில் முதல்வர் சவுகானுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார். இச்சட்டத்தின் மூலம் 12 மற்றும் அதற்கு குறைவான வயதுள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சவுகான் மேலும் பேசுகையில், ‘‘ சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு எவ்வித மனித உரிமைகளும் கிடையாது. சிலர் பல காலம் சிறையில் கழித்துவிட்டு, பின்னர் வெளியில் வந்து மீண் டும் அதே குற்றத்தை செய்கின்றனர். அவர்கள் மிருகங்களுக்கு சமமானவர்கள். அவர்கள் வாழ த குதியற்றவர்கள். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வர வேண்டும். மாநிலத்தில் இச்சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும்’’ என்றார்.

மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்ப வைக்கப்படவுள்ளது. இந்த மசோதாவில் மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 14 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ஆயுள் சிறை என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பின் தொடர்தல், துறவறத்தை கலைக்கும் செயல், பாலியல் உறவுக்கு பின் திருமணம் செய்ய மறுத்தல் போன்ற குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்க அந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.