வாஷிங்டன்

ர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ எம் எஃப் அமைப்பில் முதல் பெண் பொருளாதார நிபுணராக மைசூரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியமான ஐ எம் எஃப் அமைப்பில் மௌரிஸ் அப்ஸ்ட் தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்து வந்தார்.  இவர் கடந்த ஜுலை மாதம் தான் ஓய்வு  பெறப்போவதாக அறிவித்திருந்தார்.    ஏற்கனவே முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இந்த பதவி வகித்துள்ளார்.

மௌரிஸ் ஓய்வை அடுத்து அவர் பதவிக்கு இந்த்ய வம்சாவளியினரான கீதா கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.   இன்று அவர்  பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள்ளார்.   இவர் இந்த பதவி வகிக்கும் இரண்டாம் இந்தியர் ஆவார்.

தற்போது 46 வயதாகும் கீதா கோபிநாத் மைசூரை சேர்ந்தவர்.  இவர் டில்லி பல்கலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பையும், டில்லி  ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் ஆவார்.  அதன் பிறகு கீதா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார்.   தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார்.

இவர் சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் ஆவார்.   இவர் அன்னிய செலாவணி, வர்த்தகம், முதலீடு குறித்து 40 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றவ்ர் ஆவார்.   அத்துடன் தற்போத் சர்வதேச பொருளியல் கையேட்டின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.