இயக்குனர் செல்வராகவன் வீட்ல விசேஷம்ங்க….!

திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதிக்கு லீலாவதி மற்றும் ஓம்கார் என இரண்டு அழகான குழந்தைகள் உள்ளது.

தற்போது மூன்றாம் குழந்தையை எதிர்பார்க்கின்றனர் இந்த தம்பதி. இதுகுறித்து கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கர்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார்.