50 லட்சம் கொடு: நடிகை அலியா பட்டிற்கு மும்பை தாதா கொலை மிரட்டல்

மும்பை,

50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, பிரபல இந்தி நடிகை அலியா பட்-டுக்கு, மும்பை நிழல் உலக தாதா கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் ((Mahesh Bhatt)) மகள் அலியா பட்.

இவர் தற்போது  இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

சம்பவத்தன்று அவரது வீட்ட தொலைபேசிக்கு வந்த மர்ம போனில்,  50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். தர மறுத்தால்  அலியா பட்டையும், அவரது தாயாரையும் கொலை செய்யப்போவதாக போனில் பேசியவர் மகேஷ்பட்டிடம்  கூறியதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இதை விளையாட்டாக எடுத்துக்கொண்ட அவர், பின்னர் தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வந்த மிரட்டல் தகவல்களை பார்த்து மிரட்டார். அதையடுத்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

மிரட்டல் அனைத்தும்,  மும்பை நிழல் உலகை சேர்ந்த தாதா ஒருவரின் பெயரில் மிரட்டல் வந்துள்ளதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை அலியாபட்டுக்கு மிரட்டல் வந்துள்ளது குறித்து மும்பை திரையுலகம் அதிர்ச்சி அடைந்து உள்ளது.