சென்னை:

கேரளாவில் மரணம் அடைந்துள்ள கிருண்ஷசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகனை எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு அழைத்துசென்ற திருத்துறைப்பூண்டிச் சேர்ந்த கிருஷ்ணசாமி மனஅழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துவருகின்றன.

இறந்த கிருஷ்ணசாமியின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டிச் சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் நுழைவு தேர்வு எழுதினார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம்  நிதி உதவி போதாது. அவருக்கு மேலும் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும், . அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.