1
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை பார்த்திருக்கிறோம். வேட்பாளருக்கு வாக்காளர்கள் கொடுப்பார்களா?
இந்த அதிசயம் சைதாப்பேட்டையில் நடக்கிறது. இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பாக  போட்டியிடும் மா. சுப்பிரமணியன்,  சென்னை மேயராக இருந்து பிரபலமானவர்.
இந்தத் தேர்தலில் வாகனத்தில் பிரசாரம் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்து,  தினமும் சுமார் 10 மணி நேரம் நடந்து சென்றே ஆதரவு திரட்டுகிறார்.  சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.  அப்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து
அவர் பிரசாரத்துக்கு செல்லும் போது பலர் ஆர்வத்துடன் அருகில் சென்று வாழ்த்து தெரிவித்து தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று பணம் கொடுக்கிறார்கள். ரூ.50, ரூ.100 என்று கொடுக்கிறார்கள். மறுத்தாலும், வற்புறுத்தி  கொடுப்பவர்களிடம்   பெற்றுக் கொள்கிறார் சுப்பிரமணியம்.  ஏழை தொழிலாளாளி ஒருவர் சுமார் 1000 ரூபாய்க்கு 10 ரூபாய் நோட்டுக்களை மாலையாக கோர்த்து அணிவித்தார்.
இப்படி இதுவரை  ரூ.25 ஆயரத்துக்கும் மேல் வசூலாகி இருக்கிறது.
பணம் கொடுக்கும் மக்களிடம் கேட்டால், “மா.சுப்பிரமணியன் ரொம்ப சாதாரணமான மனிதர். அவர்தான் இந்த பகுதியில் பாலம் கட்டித்தந்தார். அதுமட்டுமல்ல..  வெள்ள நேரத்தில் வீடுகள் மூழ்கிவிட்டன.  சாப்பிடக்கூட எதுவும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்  இவர்தான்,  தண்ணீருக்குள் வந்து எங்களை காப்பாற்றி உணவளித்து பாதுகாத்தார்” என்று நெகிழ்கிறார்கள் மக்கள்.