டெல்லி:

மூக ஊடகங்களில் இருந்து பிரதமர் மோடி வெளியாவதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில்,  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரதமரின் முடிவு குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், சமூக ஊடக கணக்குகள் அல்ல, வெறுப்பைக் கைவிடுங்கள் என்று மோடிக்கு தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான  டிவிட்டரில் 53.3 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் ,  44 மில்லயன் பேர்களும் தொடர்கிறார்கள். அதுபோல, இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியன் பேரும், வீடியோன சேனலான யுடியூபில்  4.5 மில்லியனும்  பாலோயர்களாக உள்ளனர்.

டிஜிட்டல்மயமாக்கலை ஊக்கப்படுத்தி வரும் பிரதமர், “இந்த ஞாயிறன்று, அனைத்து சமூக ஊடகங்களான முகநூல், oவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருகிறேன். இது குறித்து விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன்” என 2ந்தேதி பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பலர் மோடியிடம் காரணம் கேட்டு வினவி உள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில், மோடிக்கு அறிவுரை கூறி உள்ளார். அதில்,  மக்கள் மீதான வெறுப்புணர்வை கைவிடுங்கள்; சமூக வலைதள கணக்குகளை அல்ல என்று தெரிவித்து உள்ளார்.