டெல்லி: டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் போராட்டம் 7வது நாளை எட்டி உள்ளது.

இது வரை 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதில் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. கருத்தொற்றுமை ஏற்படாததால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், வரும் 8ம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம் என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஹெச்.எஸ். லாகோவால் டெல்லி – அரியானாவை இணைக்கும் சிங்லு பகுதி எல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஏற்கெனவே எங்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தி உள்ளோம். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, போராட்டம் தொடரும். டிசம்பர் 5ம் தேதி பிரதமர் மோடியின் உருவ பொம்மை நாடு முழுவதும் எரிக்கப்படும் என்று தெரிவித்தார்.