”மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியது பாவம்” – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும் கோப்பில் கையொழுப்பமிட்டு பாவம் செய்துவிட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

marina

மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கி பாவத்தைச் செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, “ மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைகளைப் பிடித்து கெஞ்சியும் மெரினாவில் இடம் கொடுக்க மறுத்துவிட்டதாகச் சொல்கிறார். கையைப் பிடித்து அல்ல, காலைப் பிடித்துக் கெஞ்சினாலும் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க எந்த அதிமுக தொண்டனும் சம்மதிக்கமாட்டான்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும் கோப்பில் கையெழுத்திட்டது, செய்தித்துறை அமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் நானும்தான். அந்தப் பாவத்தைச் செய்தது நான் தான். முதல்வர் அல்ல ” என்று அவர் குறிப்பிட்டார்.