அதிமுக கூட்டணியில் வாசனுக்கு தஞ்சாவூரும், ஏசி.சண்முகத்துக்கு வேலூரும், ஒதுக்கீடு….

சென்னை:

திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதியக்கட்சிக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதியும், தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று எந்த தொகுதி என்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இதில்,தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஜி.கே.வாசன் போட்டி யிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமாகா களமிறங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதுபோல அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டு உள்ளது.அந்த கட்சியின் சார்பில் ஏசி சண்முகம் களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜி.கே.வாசன்,  தேர்தல் கூட்டணி என்பது வேறு, கட்சியின் லட்சியம் வேறு என்று கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AC Shanmugam, admk, ADMK Alliance, GK Vasan, LokSabhaElections2019, Tanjore constituency, vellore constituency
-=-