ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராவதை வரவேற்கிறேன்: ஜி.கே.வாசன்

சென்னை,

கில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக ராகுல்காந்தி வருவதை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல்காந்தி கட்சியின் தலைவராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 6ந்தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  அகில இந்திய காங். தலைவராக ராகுல்காந்தி வருவதை வரவேற்கிறேன் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், நடைபெற உள்ள  உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறி உள்ளார்.