கவர்ச்சி சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படப் பெயர் அறிவிப்பு 

பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு மொழி பேதமின்றி ரசிகர்கள் உண்டு. கவர்ச்சிக்கு ஏது மொழி?

தற்போது அவர் வி.சி. வடிவுடையான் இயக்கும் தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார் அல்லவா.. இதன் பெயர் அறிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இயக்குநர் வடிவுடையான், படத்தின் பெயரை இன்று அறிவிப்பதாக அறிவித்திருந்தார். (ரஜினி பாணியால இருக்கு!)

ஆனால் சொன்னபடி அறிவித்துவிட்டார்.

முன்னதாக படத்தின் தலைப்பு “வீ” என்ற எழுத்தில் துவங்கும் என்று அவர் சஸ்பென்ஸ் வைத்திருந்தார். இதனால் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று அறிய துடித்துக்கொண்டிருந்தனர். ( சும்மா பில்ட் அப்தான்!)

இந்த நிலையில் “வீரமாதேவி” என்று படத்தின் பெயரை அறிவித்துள்ளது படக்குழு.

படப்பெயரை அறிவிக்கிறதுக்கே  இப்படின்னா… கட்சி துவங்குறது பத்தி ரஜினி பில்ட் அப் காட்றது தப்பே இல்லே.

கார்ட்டூன் கேலரி