இன்றைய ஐபிஎல் போட்டிகள் – ஒரு சிறு பார்வை!

--

அபுதாபி: இன்றைய ஐபிஎல் போட்டிகளில் ஒன்றில், பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி & 1 தோல்வியுடன் சம புள்ளிகளைப் பெற்றுள்ளன.

மும்பைக்கு எதிராக 201 ரன்கள் அடித்தும், சூப்பர் ஓவரில்தான் வென்றது பெங்களூரு அணி. அந்த அணியில், கேப்டன் கோலியின் ஆட்டம் இன்னும் எழுச்சிப் பெறவில்லை.

ராஜஸ்தானைப் பொறுத்தவரை, 223 ரன்களையே விரட்டிய அந்த அணி, கொல்கத்தா அணி நிர்ணயித்த குறைந்த ஸ்கோரை எட்ட முடியாமல் தோற்றுப் போனது. அந்த அணி இன்று எழுச்சி பெற முயலும்.

மற்றொரு போட்டியில், டெல்லி & கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் டெல்லி அணி சென்னையையும், கொல்கத்தா அணி ராஜஸ்தானையும் வீழ்த்தின. இன்றைய போட்டி, சம பலத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.