தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகளவில் பல்வேறான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த விளையாட்டு வகைப்பாட்டில், என்னென்ன போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன & ரத்துசெய்யப்பட்டுள்ளன மற்றும் எந்தப் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமலேயே துவங்கின என்பது தொடர்பாக ஒரு மேலோட்டமான பார்வையை ஓடவிடலாம்.

ஒலிம்பிக்
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021ம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
* ஒலிம்பிக் தகுதி தடகளப் போட்டிகள் டிசம்பர் மாதம் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.

கால்பந்து
* 2020 கே-லீக் சீசன் போட்டி ரசிகர்கள் இல்லாமல், மே மாதம் 8ம் தேதி துவங்கியது.
* யூரோ 2020 மற்றும் கோபா அமெரிக்கா தொடர்கள் அடுத்த 2021ம் ஆண்டின் ஜுன், ஜுலை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* யூரோ 2021 பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்
* இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச்சில் துவங்கவிருந்த ஐபிஎல் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* பல நாடுகளுக்கிடைய‍ நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர்கள் ரத்துசெய்யப்பட்டன
* இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பைத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
பாராலிம்பிக்ஸ்
* பாராலிம்பிக்ஸ் போட்டிகள் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
உலக பீச் போட்டிகள்
* 2021ம் ஆண்டு நடைபெறவிருந்த உலக பீச் போட்டிகள் 2023ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
தடகளப் போட்டிகள் (அத்லெடிக்ஸ்)
* 2021ம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒலிம்பிக் ஒத்திவைப்பு காரணமாக, 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
* உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் 2021ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* பாஸ்டன் மாரத்தான் போட்டி செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* லண்டன் மாரத்தான் போட்டி அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேட்மின்டன்
* 2021ம் ஆண்டிற்கான உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப், ஆகஸ்டிற்கு பதிலாக செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* தாமஸ் மற்றும் உபெர் கோப்பை போட்டி அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை
* டில்லியன் ஒய்ட்ஸ் – அலெக்ஸாண்டர் பாவெட்கின் இடையிலான ‍ஹெவிவெய்ட் குத்துச்சண்டைப் போட்டி, ஜுலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சைக்ளிங்
* கிரோ டி’இத்தாலியா போட்டி அக்டோபர் 3ம் தேதிக்கும், ஸ்பானிஷ் வியூல்டா போட்டி அக்டோபர் 20ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
* இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஐரோப்பியன் ரோட் சைக்ளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோல்ஃப்
* ஜுன் மாதம் நடைபெறவிருந்த நியூயார்க், விங்க்ட் ஃபூட் கோல்ஃப் கிளப்பில் நடைபெறும் யூ.எஸ். ஓபன் கோல்ஃப் போட்டி, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஜுன் மாதம் நடைபெறவிருந்த மகளிர் பிஜிஏ சாம்பியன்ஷிப் போட்டி, அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஆஸ்திரேலியன் பிஜிஏ சாம்பியன்ஷிப்  போட்டி, டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குதிரைப் பந்தயம்
* பிரான்ஸ் நாட்டில் பார்வையாளர்கள் இல்லாமலேயே மே 11ம் தேதி பந்தயம் தொடங்கிவிட்டது.
* வட அமெரிக்காவில் மே மாதம் நடைபெறவிருந்த கென்டக்கி டெர்பி பந்தயம், செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* பார்வையாளர்கள் இல்லாமல், சர்ச்சில் டெளன்ஸ் போட்டி, மே 16ம் தேதி துவங்கவுள்ளது.
 
மோட்டார் பந்தயங்கள்
* ஜுன் மாதம் நடைபெறவிருந்த த லீ மான்ஸ் 24 மணிநேர பந்தயம், செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* த இண்டியானாபோலிஸ் 500 பந்தயம், ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஃபார்முலா ஒன் பந்தயம், வரும் ஜூலையில் ஆஸ்திரியாவில் தொடங்கி, துபாயில் டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.
* இண்டிகார் பந்தயம், ஜுன் 6ம் தேதி பார்வையாளர்கள் இல்லாமல் தொடங்குகிறது.
 
ரக்பி
* பிரான்ஸ் நாட்டின் ரக்பி கூட்டமைப்பு, தான் நடத்தும் அனைத்துப் போட்டிகளையும் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.
* ஐரோப்பிய ரக்பி சீசன் போட்டிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
* சூப்பர் ரக்பி தனது சீசனை ரத்து செய்துள்ளது.

 
சர்ஃபிங்
* உலக சர்ஃபிங் கூட்டமைப்பு, தனது அனைத்துப் போட்டிகளையும் ஒத்திவைத்துள்ளதோடு, எதிர்கால போட்டிகள் குறித்து அறிவிப்புகளையும் தள்ளிவைத்துள்ளது.

டேபிள் டென்னிஸ்
* இந்தாண்டு ஜூலை மாத இறுதிவரை, தனது அனைத்துப் போட்டிகளையும் தள்ளிவைத்துள்ளது சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு.

டென்னிஸ்
* புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளது. வேறு தொழில்முறை போட்டிகளும் ஜூலை 13 வரை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
* ‍ஃபெட் கோப்பை இறுதிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
* பிரெஞ்சு ஓபன் போட்டியின் தேதிகள் குறுக்கிடுவதால், லேவர் கோப்பை டென்னிஸ் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
 
வாலிபால்
* சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு, இந்த மாதம் நடைபெறவிருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் நேஷன்ஸ் லீக் போட்டிகளை ரத்துசெய்துள்ளது.
* மே 11ம் தேதி துவங்கப்படவிருந்த தனது வாலிபால் சீசன் போட்டிகளையும் அந்த அமைப்பு ரத்துசெய்துள்ளது.

குளிர்கால போட்டிகள்
* ஆண்களுக்கான ஆல்பைன் ஸ்கையிங் உலகக்கோப்பை இறுதிப் பந்தயங்களை சர்வதேச ஸ்கை கூட்டமைப்பு ரத்துசெய்துள்ளது.
* கனடாவில் நடக்கவிருந்த பெண்களுக்கான உலக ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
* மே மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த ஐஸ் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டள்ளன.
* தென்கொரியாவில் நடைபெறவிருந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபர் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
* கனடாவில் நடைபெறவிருந்த உலக ஃபிகர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்  போட்டிகள் ரத்துசெய்யப்பட்டன.
 
நெட்பால்
* நெட்பால் சூப்பர்லீக் ஃபிக்சர்ஸ் இந்தமாத இறுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

துடுப்பு படகுப் போட்டி
* ஜூலையில் நடைபெறவிருந்த யூஎஸ் ரோயிங் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளும், ஆகஸ்டில் நடைபெறவிருந்த யூஎஸ் ரோயிங் மாஸ்டர்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* பிரிட்டிஷ் ரோயிங் கூட்டமைப்பு, தனது அனைத்துப் போட்டிகளையும் ஜூலை 31 வரை ரத்துசெய்துள்ளது.