கண்ணாடி கூரை கொண்ட ரெயில்பெட்டி சிம்லாவில் அறிமுகம்

சிம்லா

ண்ணாடியால் கூறை உட்பட பாகங்கள் அமைக்கப்பட்ட ரெயில் பெட்டி சிம்லாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் சிம்லாவும் ஒன்றாகும். இயற்கை எழில் மிகுந்த இந்த மலைப் பிரதேசம் இமாசலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை காட்சிகளை காண உலகெங்கும் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவர இமாசல பிரதேசத்தில் சிம்லாவில் இருந்து ஹரியானா மாநிலம் கல்கா வரையிலான ரெயில் பாதையில் புதிய ரெயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. யுனெஸ்கோவால் புராதன சின்னமக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மலை ரெயிலில் கண்ணாடி பெட்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இந்த ரெயில் பெட்டிகளின் மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவை கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் 360 டிகிரி கோணத்தில் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியும். முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டியில் 36 பேர் பயணிக்க முடியும்.

இந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.130 எனவும் குழந்தைகளுக்கு ரூ.75 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சேவையின் வெற்றியை பொறுத்து மேலும் பல சுற்றுலாத் தலங்களில் இத்தகைய கண்ணாடி ரெயில் பெட்டிகளை அறிமுகம் செய்ய ரெயில்வே பரிசீலனை செய்து வருகிறது.