Random image

மருத்துவர்களுக்கு லஞ்சம்: க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம்

அங்கீகரிக்கப்படாத மருந்துகளை  நோயாளிகளுக்கு சிபாரிசு செய்ய   மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்த  க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பிரென்ட்ஃபோர்டை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் மருந்து தயாரிக்கும் கம்பெனியான க்ளேக்ஸோ-ஸ்மித்-க்ளைன் நிறுவனம் உலகின் ஆறாவது மிகப்பெறும் மருந்து தயாரிக்கும் நிறுவனமாகும் .
ஃபிசெர்,நோவார்டிஸ்,மெர்க், ஹோஃப்மேன்-லா-ரோச், சனோஃபி ஆகிய நிறுவனங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளது. நிதி வருமானத்தில் நோவர்டிஸ் மற்றும் மெர்க் கம்பெனிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் கிளைகள் உலகெங்கும் உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியதுடன் 300 கோடி அபராதமும் செலுத்த ஒப்புக்கொண்டது. உலகிலேயே ஒரு மருந்துக் கம்பெனியால் கொடுக்கப்படும் அதிகப்பட்சமான இழப்பீடு தொகை இதுவாகும்.

க்ளேக்ஸோநிறுவனம் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை நோயாளிகளுக்கு சிபாரிசு செய்திட டாக்டர்களை ஊக்குவிக்கும்விதமாக , எட்டு முறை போர்டோ ரிகோ, ஹவாய் மற்றும் பாம் ஸ்பிரிங்ஸ், கலிபோர்னியாவில் உள்ள விடுதிகளில் பகட்டான மூன்று நாள் நிகழ்வுகளை 2000 மற்றும் 2001ம் ஆண்டில் நடத்தியது.


அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு $ 750, இலவச தங்கும் வசதி மற்றும் ஸ்னார்கெல்லிங், கோல்ஃப், ஆழ்கடல் மீன்பிடி, படகு, கண்ணாடி அடிப்பாகமுடைய படகு சவாரிகள், சூடான காற்று பலூன் சவாரி மற்றும், ஒரு பயணம், பகார்டி ரக ரம், ஒரு சுற்றுப்பயணம் உட்பட பல சொகுசு நடவடிக்கைகள் என இந்நிறுவனம் பணத்தினை வாரி இறைத்தது.

மேலும் பெரும்பாலான நிகழ்வுகளில், மருத்துவர்கள் மற்றும் மனைவிக்கு விமானக் கட்டண செலவினையும் ஏற்றதோடல்லாமல் இந் நிகழ்வில் உரையாற்றியவர்களுக்கு $ 2,500 வீதம் வழங்கப்பட்டது.

ஒரு நிகழ்வு துவங்குமுன், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் ” ஒரு அற்புதமான மற்றும் மறக்க முடியாத இரவு கொண்டாட்டத்தினை நாங்கல் திட்டமிட்டுள்ளோம் , இதில் – நீங்கள் ஆடம்பரத்தின் சுவையை அனுபவிக்கலாம் ” என்றார்.

இது குறித்து நடைப்பெற்றுவந்த வழக்கில் 300 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அபராதம் மிகவும் சிறிய தொகையாகும்.

பாக்சில் மூலம் 1160 கோடி லாபமீட்டப்பட்டுள்ளது. அவந்தியா மருந்து  மூலம் 1040 கோடி லாபமீட்டப்பட்டுள்ளது. வெல்புர்டின் மூலம் 590 கோடி லாபமீட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் மருந்தின் பாதுகாப்பினைத் தவறாகக் குறிப்பிட்டு ஒரு மருத்துவ இதழில் ஒரு போலிக் கட்டுரையை வெளியிட்டது. இந்த பத்திரிக்கை சில வார்த்தைகளை மாற்ற பல முறை கேட்டும் இந்த நிறுவனம் கட்டுரையை  அப்படியே வெளியிட்டதுடன், அதனை பிரதி எடுத்து விற்பனைப் பிரதிநிதிகளிடம் கொடுத்து, மருத்துவர்களிடம் காட்டச்சொல்லி மருந்தின்விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட மூன்று சோதனைகளிலும் இந்த மருந்து, குழந்தைகள் மீது அதன் செயல்திறனை நிரூபிக்க தவறிவிட்டது என்று தெரிந்தும், கிளேக்சோ நிறுவனம் ” விடலைப் பருவ மனச் சோர்விற்கு சிறந்த மருந்து – பாக்சில் ” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மற்றொரு மருந்து: பெரியவர்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய மருந்தான வெல்புர்டின் எனும் மருந்தினை குழந்தைகளுக்கு விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று மற்றொறு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது: அவந்தியா எனும் நீரிழிவு நோய்க்கான மருந்தின் பாதுகாப்பினை நிருபிக்கத்தவறிய வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இதில் தனது தவறை ஒப்புக்கொள்ளவுள்ளது கிளேக்ஸோ நிறுவனம்.

உயிர் காக்கும் மருத்துவத்தில் புகழ்பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைமை அலுவலகம், சென்னை சேத்துபட்டில் உள்ளது. இந்தியாவில் இதுபோன்று ஏதேனும் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதா  என்பது கேள்விக்குறி.