இந்திய வம்சாவளிப் பெண்ணை திருமணம் செய்யும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்!

ஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண்ணுடன் அவர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.   இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட் குறித்து கூறிய   கிளன் மேக்ஸ்வெல் ‘‘எம்எஸ் டோனி இந்தியா வின் லெஜண்ட், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை காப்பியடிக்க முயற்சி செய்கிறேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்த நிலையில் கிளன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப் பெண்ணை கிளன் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்  வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன், கிளன் மேக்ஸ்வெல் உடன் இணைந்து சுற்றும் புகைப்படங்களை கிளன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேக்ஸ்வெல் – வினி ராமன் தற்போது காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேக்ஸ்வெல் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங் கனை சானியா மிர்சாவை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதுபோல, பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமிய அர்சூவை திருமணம் செய்து கொண்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் இந்திய பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.