உஷார்! அடுத்த 48 மணி நேரத்தில் இணையதள சேவை முடக்கம்

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

internet

தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து இணையதளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் நடப்பதால் cryptographic key மாற்றம் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை முறைப்படுத்தவும், பாதுகாக்கவும், நிலையான இணையதள சேவைக்கு இந்த பழுதுபார்ப்பு அவசியம் என கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இணையதள சேவை அளிப்பவர்கள் இந்த மாற்றத்திற்கு தயாராகாவிட்டால் அவர்களது இணைப்பில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இணையதள இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தகவல் தொடர்பு ஒழுங்குறை ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள பக்கங்கள் பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இத்இணையதள பயன்பாட்டாளர்கள் தயாராக வேண்டுமென சர்வதேச இணையதள சேவை அமைப்பு எச்சரித்துள்ளது.