வாஷிங்டன்:

போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், மக்கள் புரிந்து கொள்ளும் இதழியலை உருவாக்கவும், சர்வதேச தொழில்நுட்ப துறை மற்றும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேர்மையான செய்தி வழங்கும் இந்த திட்டத்தை 14 மில்லியன் டாலர் செலவில் பேஸ்புக் நிறுவனம், போர்டு அறக்கட்டளை, மோசில்லா மற்றும் இதர அமைப்புகள் இணைந்து செயல்படுத்தவுள்ளது. இதற்கான ஆராய்ச்சி, திட்டங்கள், நிகழ்ச்சிகளை நியூயார்க் சிட்டி பல்கலைக்கழக இதழியல் பள்ளி ஒருங்கிணை க்கவுள்ளது.

இந்த திட்டத்திற்கு தலைமை ஏற்கும் இப்பல்கலைக்ழக்கழக இதழியல் தொழில்முனைவோர் டோவ் நைட் மையத்தை சேர்ந்த ஜெஃப் ஜர்வீ கூறுகையில், “ கடந்த கால மீடியாக்கள் குறித்த விவாதங்களோடு, பொதுமக்களை உள்ளே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. போலி செய்திகள் குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டு, தரமான செய்தி கொண்டு வர எப்படி போராடுவது என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது’’ என்றார்

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் போலி செய்திகள் பெரும் பங்கு வகித்தன. சில குறிப்பிட்ட வாக்குகளை குறிவைத்து மோசடி கதைகள் சமூக வளைதளங்களில் பரவ செய்யப்பட்டது. இந்த கட்டுக் கதைகளும், தவறான தகவல்களும் ஐரோப்பா தேர்தலையும் பாதிக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. புதிய கதைகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் எவ்வாறு வருவாய் ஈட்ட்டபடுகிறது என்பது புலன் விசாரணையில் கண் டுபிடிக்கப் பட்டுள்ளது.

தவறான தகவல்களை கட்டுப்படுத்த பேஸ்புக் மற்றும் கூகுல் நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மோசடி செய்திகள் மற்றும் தீவிர இதழியலை மக்கள் வேறுபடுத்தி பார்க்க ஏதுவாக புதிய காரணிகளுடன் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. சிறந்த உபகரணங்கள் மற்றும் சிறந்த விவாதங்கள் மூலம் இதற்கு ஏற்ப மக்களை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இதழியல் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நவீன செய்தி கல்வி அறிவை ஏற்படுத்துவது அவசியம். அதற்கு ஏற்ப மக்கள் விவாத்திற்கான செய்திகளை வழங்க வேண்டும்.

பேஸ்புக், க்ராய்க் நியூமார்க்ஸ் பிலன்த்ரோபிக் நிதி, போர்டு பவுண்டேஷன், ஜான் எஸ் மற்றும் ஜேம்ஸ் எல் க்நைட் அறக்கட்டளை, டவ் அறக்கட்டளை, ஆப்நெக்சஸ், மோசில்லா, பீட்டா ஓர்க்ஸ், கேம்ப்பெல் பிரவுன் நிதியுதவியுடன் முன்னாள் என்பிசி மற்றும் சிஎன்என் இதழியலாளர்கள் பேஸ்புக் செய்தி கூட்டாண்மை குழுவுக்கு தலைமை ஏற்கின்றனர்.

கேம்ப்பெல் பிரவுன் கூறுகையில், ‘‘சமூக வளைதளங்கில் ஏற்படும் இப்பிரச்னைக்கு முழுமைவன தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி அமையவுள்ளது. செய்தி கல்வியறிவு என்பது உலகளவிலான கவலை. செய்திகளில் தவறான வழிநடத்துதலை மக்கள் அடையாளம் காணவேண்டியது முக்கியமானதாகும். பேஸ்புக் மற்றும் இதர செய்திகளின் உண்மை தன்மையை அறியும் வகையில் செய்தி நுட்பமாணவர்களாக மக்களை உருவாக்க வேண்டும்.

இந்த பிரச்னையை நாங்கள் தனியாக தீர்வு காண முடியாது. தவறான தகவல்களை அளிக்கும் இணையதளங்களின் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவதை பேஸ்புக் ஏற்கனவே நிறுத்திவிட்டது. தவறான செய்திகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பேஸ்புக் ஏற்கனவே அதிகப்படுத்தியுள்ளது. மேலும். புதிய செய்தி சூழல் முறைக்கு இதழியல் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த பிரச்னையை உலகளவில் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் தான் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளை ஒரு ங்கிணைத்து செயல்படவுள்ளோம்’’ என்று பிரவுன் கூறினார்.
பொய் செய்திகளை கண்டறிய மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த திட்டத்தில் பேஸ்புக் இணை ந்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவில், அரிசோனா பல்கலைக்கழகம், சர்வதேச இதழியல் மையம், செய்தி கல்வியறிவு திட்டம், அறக்கட்டளை திட்டம், மக்கள் தொடர்பு குழு வெபர் சாண்ட்விக் ஆகியவை இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பாவ இதழியல் மையம், ஆர்ஹூஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டென்மார்க் கன்ஸ்ட்ரக்டிவ் இன்ஸ்டிடியூட் , கொலும்பியாவை சேர்ந்த பண்டேசியன் கேப்ரியல் கார்சியா மர்குழவ் பெர எல் நியுவோ பீரியாடிஸ்மோ ஐபெரோழரிகானோ, ஹம் பர்க் மீடியா பள்ளி, ஜெர்மணி ஹான்ஸ் பிரிடோவ்- இன்ஸ்டிடியூட், லண்டன் பொருளாதார பள்ளியில் உள்ள போலிஸ் மீடியா துறை.

பிரான்ஸ் அறிவியல் போ பல்கலைக்கழகம், ஹாங்காங்கை சேர்ந்த ஆசியா பதிப்பக சொசைட்டி, ஆஸ்திரேலியா வால்க்லே அறக்கட்டளை, விக்கி பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் மற்றும் யுனெஸ்கோ ஆகியவை இதில் பங்கெடுத்துள்ளது. பிரஞ்ச் அதிபர் தேர்தலை பாதிக்கும் போலி தகவல்கள் கண்டு பிடி க்கும் வகையில் பிரஞ்ச் மற்றும் சர்வதேச மீடியாக்கள் மூலம், கூகுல் உதவியுடன் குறுக்கு பரிசோதனை செய்யும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.