முட்டாள் தினத்தில்  பிறந்த ஜிமெயில் 15 வருடமாக யாரையும் முட்டாளாக்காமல் இன்று வரை  தொடர்ந்து தன் சேவையை வழங்கிவருகிறது,

கூகிள் நிறுவனத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த மின்னஞ்சலில் பல சிக்கல்கள் நீடிக்க கூகிள் தங்கள் ஊழியர்களுக்கு  “20% ” என்ற் திட்டப்பணியை அறிவித்தது, அதனடிப்படை யில் கூகிழ் நிரலாளர்கள் வாரம் ஒருநாள் ஜிமெயில் திட்டத்திற்கு பணியாற்றவேண்டும் என்பதுதான் அது, இப்படி பல லட்சக்கணக்கான நிமிட பங்களிப்புக்கு பின்னரே ஜிமெயில் ஏப்ரல் 1,2004 அன்று வெளியிடப்பட்டது, ஆரம்பித்த புதிதில் 5 லட்சம் பக்கங்களை சேமிக்க ஏதுவாக 1 ஜிபி சேமிப்பகத்தை தேடும் வசதியுடன் அறிமுகபடுத்தியது

இன்று 1.5 பில்லியன்(150 கோடி) பயனாளர்களுடன் ஜிமெயில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப் பட்ட போது இப்போது திறப்பது போல் நேரடியாக கணக்கினை துவக்கமுடியாது, ஏற்கனவே  ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றவர்களை அழைப்பு கொடுத்தால் மட்டுமே கணக்கு துவங்கமுடியும், இன்றோ செயற்கை நுண்ணறிவு மூலம் ஜிமெயிலின் பிரச்னையான ஸ்பேம் பிரச்னைகளை சரி செய்துவருகின்றனர், ஒரு நாளைக்கு 1 கோடி ஸ்பாம் மடல்களை தடுத்துவருகிறது

அதுமட்டுமல்லாமல் ஆவணத்தேடல், ஆவணங்களில் அளவுத்தேடல், தேதி வாரியாக தேடல் என்று ஜிமெயில் கொடுத்துள்ள சேவைகள் மிக அதிகம் , அதுமட்டுமல்லாமல் ஜிமெயில் ஆரம்பித்த காலக்கட்டத்தில் அப்போது மற்ற மின்னஞ்சல் நிறுவனத்தின் சேவைகளை விட ஜிமெயில் 100 மடங்கு மேலானது என்று கூகுள் சொன்னது

நவீன வசதிகள்

இப்போதுள்ள ஜிமெயிலில் மின்னஞ்சலை நேர அட்டவணை மூலம் வரிசைப்படுத்தப்பட்டு எப்போது அனுப்பவேண்டும் என்று கொடுத்துவிட்டால் அது அந்த நேரத்தில் அனுப்பும்

நவீன மின்னஞ்சல் எழுதுமுறை

இப்போது ஜிமெயிலில் நீங்கள் தட்டச்சு செய்யும் போது தட்டச்சு செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ப அதுவே மறுமொழி (Reply) கொடுக்கும்

Attachment என்ற வார்த்தை உங்கள் மடலில் இருந்து நீங்க Attachment ல் ஏதும் கொடுக்காமல் விட்டால் அதுவே உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்

Birthday என்ற வார்த்தை இருந்தால் பிறந்த நாள் வார்த்தையை அதுவே கொடுக்கும்

இப்படி பல வசதிகளை கொடுத்த நமக்கு சேவை அளித்துவரும் ஜிமெயிலையும், கூகிளையும் வாழ்த்துவோம்

முதன்முதலில் நீங்கள் எப்போது ஜிமெயிலில் கணக்கு துவங்கினீர்கள், யார் உங்களுக்கு அழைப்புமடல் அனுப்பினார்கள் என்று நியாபகம் இருக்ககிறதா? அவர்களை இந்த நாளில் நினைவு கூறுங்கள், எனக்கு 2015 ல் தங்கமணி, சென்னையில் இருந்து அழைப்பு விடுத்தார், அதன்பின் நான் ஒரு 50 பேருக்கு மேல் அழைப்பு கொடுத்திருப்பேன் நீங்கள் ஜிமெயிலில் கணக்கு துவங்கிய சுவாரசிய அனுபவம் இருந்தால் நீங்கள் எங்களிடம் இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.

\-செல்வமுரளி

Leave a Reply

Your email address will not be published.