லகின் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட இணைய தளமான கூகுளின் இணையதள சேவை இன்று உலக அளவில் முடங்கி உள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்காக மேலாக சேவைகள் முடங்கி உள்ளதால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உலக அளவில் அதிக பயனர்களை கொண்ட கூகுள் இணையதளம். அதன் சேவைகளான ஜிமெயில்  போன்றவை  காலை 11 மணி முதல் வேலை செய்யவில்லை. இதுகுறித்து டிவிட்டரில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஜிமெயிலில் போட்டோ மற்றும் ஃபைல்களை அட்டாச் செய்ய முடியவில்லை, மேலும் கூகுள் டிரைவையும் திறக்க முடியவில்லை என சில பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஜிமெயில் முடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இந்தியாவை சேர்ந்த கூகுள் பயனர்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று உலக அளவில் ஜிமெயில் சேவை முடங்கி உள்ளது.

சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூகுள்அதன் பயனர்களுக்கு பதிலளித்துள்ளது