தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஞானதேசிகன் நியமனம்: தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை:

மிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஞானதேசிகன் ஐஏஎஸ், தற்போது  தொழில்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார்.  இவரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக தமிழக அரசு நியிமித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

மேலும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் உறுப்பினர்களாக பொதுப்பணி துறையின் கட்டிடங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் மனோகர் மற்றும் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரி

யல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனும், நிர்வாக உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லீனா நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.