சிங்கம் 3 – ஐ லைவாக வெளியிட்டால் சிறைதான்!: கர்ஜிக்கும் ஞானவேல்ராஜா


யக்குநர்  ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 3.

ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 என இரண்டு பகுதிகள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதையடுத்து சிங்கம் படத்தின் 3வது பகுதியான சிங்கம் 3 (எஸ்3) படத்தை ஹரி இயக்க ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் படம் வெளியாவது ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது.

தற்போது ஒரு வழியாக வரும் 9ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படத்தை 9ம் தேதி காலை 11 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளம், எந்தவொரு பட்ங்கள் ரீலிசானாலும் உடனே திருட்டுத்தனமாக படத்தை பதிவேற்றி விடுகிறது.

தமிழ் ராக்கர்ஸ்-ன் மிரட்டல் குறித்து,  படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது,

சூர்யாவின் சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ் ராக்கர்ஸ் என்னும் நபர் படத்தை ரிலீஸான அன்றே காலை 11 மணிக்கு லைவாக வெளியிடுவேன் என தெரிவி த்துள்ளார்.
என் படத்தை மட்டும் லைவாக வெளியிட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் உங்களை பிடித்து சிறையில் தள்ளாமல் விட மாட்டேன். அந்த காட்சியை நான் லைவாக வெளி யிடுவேன் என்றார்.

தமிழ் ராக்கர்ஸ் உங்களை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன்  இதை என் சவாலாக எடுத்துக் கொள்ளவும் தமிழ் ராக்கர்ஸ் என்று கூறினார்.

மேலும்  திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுபவர்களை மக்களும் எதிர்க்க வேண்டும். படத்தை தயவு செய்து தியேட்டர்களில் மட்டும் பார்க்கவும் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cine Bits, gnanavelraja challenge tamilrockers, if Singam3 release in Social media, Make sure prison, சிங்கம் 3 - ஐ லைவாக வெளியிட்டால் சிறைதான்!: கர்ஜிக்கும் ஞானவேல்ராஜா, சினிபிட்ஸ்
-=-