‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ். அப்போது லிங்குசாமிக்கு உதவ முன்வந்தார் கமல்.ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் வாங்கியுள்ளார் கமல்.

ஞானவேல்ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின் போது கொடுத்துவிடுவது என ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் வாங்கியுள்ளார் கமல்.

4 ஆண்டுகள் கடந்தும் இந்தப் பணத்துக்கு கமல் எந்தவொரு பதிலுமே கூறாததால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு இந்தப் புகார் தொடர்பாக கமல் மற்றும் ஞானவேல்ராஜா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .