காங்., தலைவர் பதவி…ராகுல்காந்திக்கு கோவா சட்டமன்றம் பாராட்டு

பனாஜி:

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றதற்கு கோவா சட்டமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கொண்டு வந்தார். இந்த மசோதா எதிர்ப்பின்றி ஒரு மனதாக நிறைவேறியது. காவ்லேகர் பேசுகையில், ‘‘அவர் தலைவர் பதவிக்கு வந்தாலும் சாதாரண தொண்டர் போல தான் கட்சியில் பணியாற்றுவார்’’ என்றார்.

இந்த தனி நபர் மசோதாவக்கு ஆதரவளித்த முதல்வர் மனோகர் பரிக்கர் பேசுகையில், ‘‘வாரிசு அரசியலின் சுழற்சியானது தற்போது பூர்த்தி அடைந்துள்ளது’’ என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ லூயிசின்கோ பெலிரியோ பேசுகையில், ‘‘இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான விஷயமாகும். குறிப்பாக கோவா மக்களுக்கு இது பெருமையான விஷயம். கோவாவுக்கும் நேரு குடும்பத்திற்கும் நெருங்கிய பந்தம் உண்டு போர்சுகஸ் ஆட்சியில் இருந்து கோவாவுக்கு விடுதலை பெற இந்திய ராணுவத்தை அப்போதைய பிரதமர் நேரு அனுப்பி வைத்தார்’’ என்றார்