வெளி மாநில மீன்களுக்கு கோவா அரசு தடை

னாஜி

பார்மலின் கலப்பு அச்சத்தினால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் மீன்களுக்கு இந்த மாத இறுதி வரை கோவா அரசு தடை விதித்துள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம் கேரளாவுக்கு மீன்பிடி தடைக்கால சமயத்தில் மீன்கள் அனுப்பி வந்தன.    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப் படும் மீன்களில் பார்மலின் என்னும் ரசாயனம் கலந்து இருந்துள்ளது.

பிணங்களை பதப்படுத்த பயன்படுத்தும் இந்த ரசாயனத்தால் புற்று நோய் ஏற்படும் என சொல்லப் படுகிறது.   இதை ஒட்டி கேரளாவில் தமிழக மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று செய்தியாளர்களிடம், “கோவா மாநில உணவு மற்றும் மருந்துக் கழகம் பிற மாநிலங்களில் இருந்து வரும் மீன்களில் பார்மலின் கலந்துள்ளதை கண்டறிந்துள்ளது.  அதனால் கோவா மாநிலத்தில் வெளி மாநில மீன்களுக்கு இந்த மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.   வெளி மாநிலங்களில் இருந்து மீன் ஏற்றி வரும் வாகனங்கள்  எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.